டிரைவரிடம் ரூ.8 லட்சம் மோசடி ரியல் எஸ்டேட் பிரமுகர் மீது வழக்கு
சேலம்: தர்மபுரி டிரைவரிடம், 8 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, ரியல் எஸ்டேட் பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
சேலம், சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ரங்கநாதன், 57. ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவருக்கும், தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை சேர்ந்த, டிரைவர் செல்வராஜ், 62, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, செல்வராஜ் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்யத்தொடங்கினார். 2003ல்,

செல்வராஜ், ரங்கநாதனுக்கு, 4 லட்சம் ரூபாய் கொடுத்தார். அத்தொகைக்கு லாபம் சேர்த்து, 2022 ஆக., 23ல், 8 லட்சம் ரூபாய்க்கு ரங்கநாதன், அவரது இந்தியன் வங்கி கணக்கில் இருந்து காசோலையை, செல்வராஜூக்கு வழங்கினார். ஆனால் அந்த காசோலை, வங்கி கணக்கில் பணமின்றி திரும்பியது.
இதுகுறித்து செல்வராஜ் கேட்டபோது ரங்கநாதன் கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அவர் அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் அளித்த புகார்படி ரங்கநாதன் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!