கறவை மாடுகளுடன் சாலை மறியல் மக்களுக்கு இலவசமாக பால் வழங்கல்
பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி, தமிழகம் முழுதும் பால் உற்பத்தியாளர் சங்கத்தினர், ஆவினுக்கு பால் வழங்காமல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே பாகல்பட்டியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க, மாநில துணைத்தலைவர் பெரியண்ணன் தலைமையில் நேற்று, கதிர்செட்டிப்பட்டியில் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன், சாலை மறியல் போராட்டம் நடத்தினர். ஓமலுார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பெண்கள் தலையில் பால் கேனை வைத்து, நடுரோட்டில் மாடுகளை நிற்க வைத்து ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் - முத்துநாயக்கன்பட்டி சாலையில், 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின் ஆவினுக்கு கொண்டுவந்த பாலை, அப்பகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கி சென்றனர்.
இதுகுறித்து பெரியண்ணன் கூறுகையில், ''பால் உற்பத்தியாளர் சங்க கோரிக்கைகள் குறித்து, முதல்வருக்கு அதிகாரிகள் தகவல் கொடுத்தனரா என தெரியவில்லை. 21 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து அரசு சிந்திக்கவே இல்லை. தமிழக அரசு பட்ஜெட்டில் சிறப்பம்சம் கிடையாது,'' என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!