Advertisement

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: 11 பேர் பலி; 100 பேர் படுகாயம்

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை, 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஹிந்து குஷ் மலைத்தொடரை மையமாக வைத்து நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகி உள்ளது. ஆப்கனை தொடர்ந்து பாகிஸ்தான், தஜிகிஸ்தான் நாடுகளிலும், நம் வட மாநிலங்களான புதுடில்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.

பாகிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லைக்கு மிக அருகே நேற்று இரவு 10:17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து, 184 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி, இதுவரை, 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் கைபர் பக்துன்கா மாகாணத்தின் ஸ்வாட் பள்ளத்தாக்கில், கட்டட இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.



வாசகர் கருத்து (3)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    பாகிஸ்தானில் நிலநடுக்கத்தை கேள்விப்பட்டு சோனியா, ராகுல் மற்றும் பல தேச துரோக தலைவர்கள் மிகுந்த கவலைக்கு ஆளாகியுள்ளனர்.

  • Nachiar - toronto,கனடா

    இந்தியா அனுதாபத்தை தெரிவு படுத்துவதுடன் நிறுத்திக் கொண்டால் நல்லது.

  • Fastrack - Redmond,இந்தியா

    பாகிஸ்தான் பிரதமரும் மந்திரிகளும் சவுதி துபாய்னு பிச்சையெடுக்க கெளம்பிடுவாங்களே ..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement