பைக் மீது லாரி மோதி 2 பேர் பலி
வேலுார் : வேலுார், கொணவட்டம், மதி நகரைச் சேர்ந்தவர்கள் முகமது ஷெரீப், 19, ஏஜாஸ், 20; கூலி தொழிலாளர்கள். நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு, இவர்கள் சொந்த வேலையாக, 'பஜாஜ் பல்சர்' பைக்கில், சத்துவாச்சாரிக்கு சென்று, அங்கிருந்து வீட்டுக்கு சென்றனர்.
கிரீன் சர்க்கிள் பகுதியில், பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே, முகமது ஷெரீப் பலியானார். வேலுார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏஜாஸ் நேற்று காலை, 10:00 மணிக்கு இறந்தார். வேலுார் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!