கூடங்குளத்தில் முதலாவது அணு உலை 600 நாள் தொடர்ந்து இயங்கி சாதனை
இந்த செய்தியை கேட்க
கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டின் தொழில் நுட்ப உதவியுடன் ஒவ்வொன்றும் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பாட்டில் உள்ளன. மேலும் 4 அணு உலைகளின் கட்டுமான பணிகள் நடக்கின்றன.
அணுமின் நிலைய இயக்குனர் பிரேம்குமார் கூறியுள்ளதாவது: முதலாவது அணு உலை நேற்று வரை தொடர்ந்து 600 நாட்கள் இடைநிறுத்தம் இன்றி இயங்கி 98 சதவீதம் மின்உற்பத்தி செய்துள்ளது. 600 நாட்களில் 14 ஆயிரத்து 114 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது.முதலாவது அணு உலை செயல்பட துவங்கியதில் இருந்து இதுவரையிலும் 52 ஆயிரத்து 665 மணி நேரம் இயங்கியுள்ளது. மின் உற்பத்தி துவக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை 47 ஆயிரத்து 470 மில்லியன் யூனிட்கள் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது.
இரண்டாவது அணு உலை இதுவரை 34 ஆயிரத்து 573 மில்லியன் யூனிட்டுகள் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது. ரஷ்ய தொழில்நுட்பத்துடன் இந்த அணுமின் நிலையம் சர்வதேச தரத்திலான நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் செயல்படுகிறது. இப்பாதுகாப்பு அம்சங்களால் அணுமின் நிலையம் மற்றும் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது என கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (2)
ஸ்டெர்லிட் மாதிரி இதை எப்படி ஊத்தி மூடலாம்? சைமா, குருமா, சைக்கோ, மட்டை ராஜா, பால்குடி கண்ணன், மரம் வெட்டி ரகசிய ஆலோசனை. பி பி சி வைத்து படம் எடுக்க இருட்டு குமார் ஐடியா .
இதற்க்கு எதிராக குரல் குடுத்த கூலி படைகள் எங்கப்பா?