தமிழகத்தில் நேற்று 10 மாவட்டங்களிலுள்ள பா.ஜ., அலுவலகத்தை கிருஷ்ணகிரியில் நடந்த விழாவில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா காணொலி காட்சி மூலம் திறந்தார். தூத்துக்குடியிலும் பா.ஜ., அலுவலக கட்டடம் திறக்கப்பட்டது.
நாகர்கோவில் எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி திறந்து வைத்தார். மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சசிகலா புஷ்பா பேசுகையில், ''மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் மறைக்கும்வேலை நடக்கிறது. நாளையே லோக்சபா தேர்தல் வந்தால் கூட தயாராக உள்ளோம். தற்போதே 90 சதவீதம் பூத் கமிட்டியை முடித்து விட்டோம். தூத்துக்குடியில் தனித்துப் போட்டியிட்டால் கூட பா.ஜ., வெற்றி பெறும் நிலை உள்ளது,'' என்றார்.
எம்.ஆர்.காந்தி கூறுகையில், ''தமிழகத்தில்ஏற்கனவே 4 மாவட்டங்களில் அலுவலகம் திறக்கப்பட்டது. எதிர்பார்த்ததுபோல நான்கு எம்.எல்.ஏ.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தற்போது 10 புதிய அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது.
வருங்காலத்தில் மேலும் 10 எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெறுவர். லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 25 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பணியாற்றி வருகிறோம். தி.மு.க., ஆட்சியை அகற்ற யாரும் சதி செய்யவில்லை,'' என்றார்.
பேனர் கிழிப்பு
இவ்விழாவிற்காக மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருகன் ஆதித்தன்டிஜிட்டல் போர்டு வைத்திருந்தார். அதில் மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா படம் இல்லை. பேனரிலிருந்த சிவமுருகன்ஆதித்தனின் படம் கிழிக்கப்பட்டிருந்தது. இப்புகார் குறித்து கட்சி அலுவலகத்தில் விசாரிக்க வந்த போலீசாருக்கும் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!