கரூரை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் பசுபதீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதிகள் என்.கிருபாகரன், பி. புகழேந்தி அமர்வு தமிழறிஞர்கள். ஆன்மிக ஆர்வலர்கள் கொண்ட குழு அமைத்து கருத்து கேட்டு அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதன்படி ஹிந்து அறநிலையத்துறையினர் தென் மாவட்டங்களில் கருத்து கேட்பதற்காக நேற்று திருநெல்வேலியில் கூட்டம் நடத்தினர்.
காலை 11:10 மணிக்கு கூட்டம் துவங்கியது. ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி வரவேற்றார். குன்றக்குடி பொன்னம்பல அடிகள், சிரவை குமரகுரு சுவாமிகள், பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகள், குமரலிங்கனார், சுகிசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதலில் பேசிய சுகிசிவம் உத்தரவில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை விளக்கினார். தொடர்ந்து குன்றக்குடி பொன்னம்பல அடிகள், அனைவரும் கருத்து தெரிவிக்கலாம் என்றார்.
பா.ஜ., மாவட்ட தலைவர் தயாசங்கர், செயலாளர் சுரேஷ், ஹிந்து முன்னணி நிர்வாகிகள் பிரம்மநாயகம், ஹிந்து மக்கள் கட்சி உடையார் ஒருபுறமும், தமிழர் அமைப்பின் நிர்வாகி வியனரசு, நாம் தமிழர் அமைப்பினர் மற்றொரு புறமும் அமர்ந்திருந்தனர்.
சுவாமி படம் இல்லை
ஹிந்து முன்னணி ராகவேந்திரன் என்பவர் அறநிலைத்துறை நடத்தும் கருத்து கேட்பு கூட்ட மேடையில் ஒரு சுவாமி படம் கூட இல்லை என கண்டனம் தெரிவித்தார்.
இதையடுத்து அவசர அவசரமாக நெல்லையப்பர் படம் ஒன்று மேடையில் உள்ள பேனரில் பொருத்தப்பட்டது.
ஹிந்து அமைப்பின் சார்பில் பாஸ்கர் என்பவர் பேசுகையில், கோயில் கும்பாபிஷேகங்கள் காலம் காலமாக ஆகமவிதிப்படி நடந்து வருகிறது.
முன்பு எப்படி நடத்தப்பட்டதோ அதே போலவே தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றார்.
இதற்கு நாம் தமிழர் உள்ளிட்ட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட்டனர். ஒருவர் மேடை ஏறி ஹிந்து முன்னணியினரை பார்த்து இங்கு கூச்சல் குழப்பம் ஏற்படுத்தாதீர்கள் என்றார்.
இதைத்தொடர்ந்து ஹிந்து முன்னணி, பா.ஜ,வினரும்↔தொடர்ச்சி ௪ம் பக்கம்கோஷங்கள் எழுப்பினர். இதனால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
குன்றக்குடி பொன்னம்பல அடிகள், 'இனி மேடையில் வாத, பிரதிவாதங்கள் தேவையில்லை. தங்களுக்கு தரப்பட்டுள்ள படிவத்தை நிரப்பித் தாருங்கள் என்றார். சுகிசிவம், கூச்சல் போடாதீர்கள் என்றார். ஆனால் அவரை நோக்கி, ஹிந்துக்களின் விரோதி சுகிசிவம் வெளியேறு...என தொடர்ந்து ஹிந்து அமைப்பினர் கோஷம் எழுப்பினர். போலீசார் இரு தரப்பையும் அமைதிப்படுத்தினர்.
கூட்டம் கூட்டிய அறநிலையத்துறை
கருத்து கேட்பு கூட்டம் என்ற பெயரில் அறநிலையத்துறை அதிகாரிகள். ஒவ்வொரு கோயிலில் இருந்தும் 10 பேரை அழைத்து வந்து அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை படிவங்களில் எழுதிக் கொடுக்க செய்தனர். எனவே இது முறையான கருத்து கேட்டு கூட்டம் அல்ல எனக் கூறி பங்கேற்றவர்கள் கருத்து கேட்பு நிரப்பு படிவங்களை கிழித்தெறிந்தனர்.
மாற்று மதத்தவர் பங்கேற்பு
கருத்து கேட்பு கூட்டத்தில் மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவர் பங்கேற்றார். அவர் ஐயப்பன் என பெயர் நிரப்பிய படிவத்துடன் இருந்தார். அவரை கண்டுபிடித்த அமைப்பினர் ஹிந்து கோயில் கருத்து கேட்பு கூட்டத்தில் மாற்று சமயத்தினர் எப்படி அனுமதிக்கப்பட்டனர் என கேள்வி எழுப்பினர். இதையடுத்து போலீசார் அவரை வெளியேற்றினர்.
காலை 11:10 மணிக்கு துவங்கிய கூட்டம் கூச்சல், குழப்பங்களோடு 12:20 க்கு முடிந்தது. பொன்னம்பல அடிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழில் குடமுழுக்கு நடத்த நெறிமுறைகளை வகுப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம். முதன்முதலாக திருநெல்வேலியில் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மற்ற இடங்களில் கருத்து கேட்போம்.
பாரம்பரிய குடமுழுக்கு நடத்துவதற்கு இது எதிரானது அல்ல. பாரம்பரிய குடமுழுக்கு விழாக்களில் நாங்களும் பங்கேற்கிறோம். தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கான நெறிமுறைகளை மேற்கொள்ளும் கருத்து கேட்பு கூட்டம்தான் இது. எல்லோரது கருத்துக்களையும் படிவங்களாக பெற்றுள்ளோம். 100 மனுக்கள் வந்துள்ளன, என்றார்.
அனைவருக்கும் அறநிலையத்துறை சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!