
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியால், சென்னையில் துவங்கப்பட்ட தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கம், 160க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் செயல்படுகிறது. இவர்கள் புயல், மழை, வெயில் பாராது, ஊண் உறக்கம் துறந்து உயிரைப் பணயம் வைத்து எடுத்த புகைப்படங்களில் சிறந்த படங்கள் தொகுக்கப்பட்டு, கண்காட்சியில் இடம் பெறுகின்றன.
தமிழகம் மட்டுமின்றி நாடு முழுதும் பயணித்த புகைப்படக் கலைஞர்களின் படங்களும், இலங்கை பிரச்னை உள்ளிட்ட படங்களும் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு பத்திரிகையிலும் ஒவ்வொரு படங்கள் சிறப்பாக வந்திருக்கும். அத்தகைய படங்களை, ஒரே இடத்தில் பெரிய அளவில் பார்க்கலாம் என்பதால், இது அறிய வாய்ப்பாக இருக்கும்.
இது போன்ற பத்திரிகையாளர்களின் புகைப்பட கண்காட்சி, தமிழகத்தில் நடப்பது இதுவே முதல் முறை. புகைப்பட ஆர்வலர்களும், பொதுமக்களும், பள்ளி, கல்லுாரி மாணவர்களும் இந்த கண்காட்சியை, ஒரு வாரகாலம், இலவசமாக காணலாம்.
வாசகர் கருத்து (3)
ஐயர் ஜி.... நம்ம தமிழர்களின் பொது அறிவைக் கேலிக்கு உரியதாக ஆக்காதீர்கள். இது சென்னை மெட்ரோ Under Ground பாதை அமைக்கும் போது அண்ணா சாலையில் ஏற்பட்ட விபத்து. நல் வாய்ப்பாக அசம்பாவிதம் எதுவும் நடக்க வில்லை. வெளி தேச மக்கள் மோடிக்கு காவடி தூக்க வேண்டியது. இப்படி கருத்து போட வேண்டியது. நான் உங்களைச் சொல்லவில்லை. அதுக்காக நான் உ பி , யோ, சங்கியோ, டம்மியோ கிடையாது. தமிழர்கள் நலனோடு இந்திய மற்றும் உலக மக்கள் நலம் நாடும் நண்பன் .
.. நம்ம தமிழர்களின் பொது அறிவைக் கேலிக்கு உரியதாக ஆக்காதீர்கள். இது சென்னை மெட்ரோ Under Ground பாதை ...
இப்படிப்பட்ட சாலைகளைப்போட்டவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? எதற்கும் எதிர்த்து குரல் கொடுக்கமுடியாத நரகமாக தமிழகம் இருக்கிறது.