சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை விழுப்புரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
புதுச்சேரி, : மூன்று சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை தந்த வாலிபருக்கு, புதுச்சேரி போக்சோ கோர்ட்டில் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 11, 8 மற்றும் 6 வயதுள்ள மூன்று சிறுவர்கள், புதுச்சேரி மாநிலம் மங்கலம் அருகே உள்ள கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்த கன்னியப்பன் என்பவர் வீட்டில் தங்கி, வாத்து மேய்த்து வந்தனர்.
கடந்த 2020ம் ஆண்டு டிச., 16ம் தேதி, குழந்தைகள் பாதுகாப்பு குழுமம் மூலம் மங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதில், கன்னியப்பன் வீட்டில் பணிபுரியும் மூன்று சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலால் பாதிப்படுவதாகவும், அவர்களை மீட்டு, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரப்பட்டிருந்தது.
போலீசார் விரைந்து சென்று மூன்று சிறுவர்களை மீட்டனர். விசாரணையில், வாத்து பண்ணையில் வேலை செய்த விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு கிராமத்தை சேர்ந்த நீலகண்டன் மகன் பசுபதி,22; சிறுவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததும், அவருக்கு, துணையாக கன்னியப்பன், அவரது மகன்கள் ராஜ்குமார், சரத்குமார், தொழிலாளிகள் வேலு, மூர்த்தி ஆகியோர் இருந்ததும் தெரியவந்தது.
அதன்பேரில் பசுபதி உள்ளிட்ட 6 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் மீது புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி செல்வநாதன், வழக்கில் முதல் குற்றவாளியான பசுபதிக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்தும், மற்ற 5 பேரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார். பாதிக்கப்பட்ட மூன்று சிறுவர்களுக்கு அரசு சார்பில் தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!