அரசு நிறுவனத்தின் கணக்கு முடக்கம்?
புதுச்சேரி : புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தின் வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் (பி.ஆர்.டி.சி.,) நுாற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
இவர்களுக்கான இ.எஸ்.ஐ., தொகையை, கடந்த காலங்களில் இருந்த அதிகாரிகள் சரிவர செலுத்தவில்லை என தெரிகிறது.
இந்த பிரச்னையை சரி செய்வதற்கு தற்போது பொறுப்பில் உள்ள அதிகாரிகள் முயற்சி செய்து வந்தனர்.
இந்நிலையில், பி.ஆர்.டி.சி.,யின் வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரச்னைக்குதீர்வு காண்பதற்கு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!