புதுச்சேரி : மின்துறையை தனியார் மயமாவதை கண்டித்து அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சம்மேளன தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆலோசகர்கள் சீத்தாராமன், கீதா, வின்சென்ட்ராஜ் முன்னிலை வகித்தனர்.
கவுரவத் தலைவர் பிரேமதாசன், பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், அமைப்பு செயலாளர்கள் முனுசாமி, ஆனந்தகணபதி, சிவஞானம், துணை பொது செயலாளர்கள் ஞானசேகர், வேல்முருகன், பொருளாளர் கிறிஸ்டோபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு நிறுவன மான பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷ னிடம் இருந்து ரூ.250 கோடி கடனாகபெற்று ப்ரீபெய்ட் மின் மீட்டர்களை பொருத்த முடிவெடுத்துள்ளது.
ஏற்கனவே சோதனை அடிப்படையில், புதுச்சேரி யில் 33 ஆயிரம் ஸ்மார்ட் மின்மீட்டர்களை பொருத் தியதில் பல்வேறு தொழிற் நுட்ப கோளாறு காரணமாக இன்று வரை சரி செய்யப் படாமல் உள்ளது.
புதுச்சேரி அரசு மின் துறையை தனியார் மய படுத்தும் நோக்கோடு, ப்ரீபெய்டு மீன் மீட்டர் பொருத்த உள்ள பணி யினை முதல்வர் மற்றும் மின்துறை அமைச்சர் தலை யிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகை வலிறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!