ADVERTISEMENT
புதுச்சேரி, : பிறந்த நாள் விழா கொண்டாடிய அரசு கொறடா ஆறுமுகத்திற்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.
அரசு கொறடா ஆறுமுகம் தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு, முதல்வர் ரங்கசாமி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் இந்திரா நகர் தொகுதியைச் சேர்ந்த 500 பேருக்கு முதியோர் உதவி தொகைக்கான ஆணை, ஊனமுற்றோருக்கான உபகரணங்களை முதல்வர் வழங்கினார்.
மேலும் என்.ஆர்.காங்., 13 வது ஆண்டு விழாவையொட்டி, பிரியாணி வழங்கப்பட்டது.
விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்மிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சாய் சரவணன்குமார், முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ். துணை சபாநாயகர் ராஜவேல், எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமிகாந்தன், பாஸ்கர், ரமேஷ், ஜான்குமார், ரிச்சர்ட், செந்தில்குமார், நேரு, புதுச்சேரி பிருந்தாவனம் சிவராமன், லக் ஷனா ஜூவல்லர்ஸ் உரிமையாளர் புகழேந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!