தலித், பழங்குடி இயக்கங்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி : தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டிற்கு ஒதுக்கிய நிதியை செலவிட வலியுறுத்தி புதுச்சேரி மாநில தலித், பழங்குடி இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி, ஒதியஞ்சாலை போலீஸ் ஸ்டேஷன் அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., நீலகங்காதரன், நிர்வாகிகள் ராமச்சந்திரன், ஏகாம்பரம், பாஸ்கர், ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சட்டசபை நோக்கி சென்ற ஊர்வலத்தை, ஜென்மராக்கினி மாதாகோவில் அருகே போலீசார் தடுத்ததால், அதே இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டிற்காக ஒதுக்கிய நிதியை முழுமையாக செலவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!