ADVERTISEMENT
புதுச்சேரி : ஆதிதிராவிடர் சிறப்புக்கூறு நிதி செலவினங்கள் குறித்து அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமையில் 22 துறைகளின் அதிகாரி கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
சட்டசபையில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் நடந்த கூட்டத்திற்கு, அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் நல செயலர் கேசவன் முன்னிலை வகித்தார்.
சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமலு, கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, கூட்டுறவு துறை பதிவாளர் யஷ்வந்தயா உட்பட 22 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆதிதிராவிடர் சிறப்புக்கூறு நிதி செலவீனங்கள் குறித்தும், சிறப்புக்கூறு நிதியின் கீழ் புதிய திட்டங்கள் வடிவமைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி பிரிவினர் முழுவதுமாக பயன்பெற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!