Advertisement

ஈரோடு - பழநி ரயில் வழித்தட திட்டம் பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கீடு

திருப்பூர்:ஈரோடு - பழநி ரயில் வழித்தட திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில், ஆய்வுப்பணிக்காக, 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் இருந்து பெருந்துறை, சென்னிமலை, காங்கயம், தாராபுரம் வழியே பழநிக்கு 91 கி.மீ., ரயில் பாதை அமைக்கும் திட்டம், 1922ல் திட்டமிடப்பட்டது. காகித அளவில் இருந்த இந்த திட்டம், 2005 பட்ஜெட் அறிவிப்புக்கு பின் ஆய்வு பணி துவங்கியது; ஆனால், செயல்வடிவம் பெறவில்லை. பத்தாண்டு கடந்தும் திட்டம் குறித்த எந்த அறிவிப்பு இல்லாமல் இருந்தது. கடந்தாண்டு இறுதியில் மத்திய அரசின் 'கதி சக்தி' திட்டத்தில், ஈரோடு - பழநி வழித்தடத்தை சேர்ப்பதாக ரயில்வே வாரியம் அறிவித்தது.

பிப். 1ம் தேதி அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இத்திட்டத்துக்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

'ஈரோடு - பழநி இடையே ரயில் வழித்தடம் அமைய 150 எக்ேடர் நிலம் தேவைப்படும். 130 பாலங்கள் அமைக்க வேண்டியிருக்கும்; ஒன்பது ரயில்வே ஸ்டேஷன்கள் அமையும்' என, தெரிவிக்கப்பட்டது.

முதல்கட்டமாக திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களில் சென்னிமலை, காங்கயம், குண்டடம், தாராபுரம், தொப்பம்பட்டி பகுதியில் நில அளவை பணி மட்டும் நடந்துள்ளது.

ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்'ஈரோடு - பழநி ரயில் பாதை திட்ட ஆய்வுப்பணிக்கு, முதற்கட்டமாக, 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆய்வு மற்றும் தேவைப்படும் நில அளவைப்பணிகள் விரைவில் துவங்க வாய்ப்புள்ளது' என்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement