Advertisement

முத்து ரத்தின அரங்கம் பள்ளியில் நீர் குடம் பயணம் துவக்க விழா

ADVERTISEMENT


புதுச்சேரி, : புதுச்சேரி, கவுண்டம்பாளையம் முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நீர் குடம் பயணம் துவக்க விழா நடந்தது.

கவுண்டம்பாளையம்-வழுதாவூர் சந்திப்பில் இருந்து நீர் குடத்தை தண்ணீர் திருவிழா குழுவை சேர்ந்தவர்கள் மற்றும் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் வரவேற்று பள்ளிக்கு எடுத்துச் சென்றனர்.

பள்ளியில், தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன், முதல்வர் கவிதா ஆகியோர் நீர் குடத்தை பெற்றுக் கொண்டனர்.

பின், நடந்த விழாவில் உழவர்கரை நகராட்சி கமிஷனர் சுரேஷ் ராஜா வாழ்த்திப் பேசினார்.

கோஜி ரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் சுந்தரராஜன், குளங்களை காப்போம் குழுத் தலைவர் கார்த்திகேயன், வாட்டர் ஆப் புதுச்சேரி குழுத் தலைவர் தினேஷ், நன்செய் குழு நிறுவனர் அருள்சேகர், பாண்டிகேன் அமைப்பு புரகீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் நீரின் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. நீர் குடத்தை அனைத்து பள்ளிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு, மார்ச் 22ம் தேதி நிறைவு விழா நடக்கும்.

ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயந்தி, ஆசிரியர்கள் நெடுஞ்செழியன், கார்த்திக், ஜீவா செய்திருந்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement