ADVERTISEMENT
காரைக்கால் : என்.ஆர். காங். கட்சியின் 13ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி காரைக்காலில் நடத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
காரைக்கால் வடக்கு தொகுதியில் திருமுருகன் எம்.எல்.ஏ., தலைமையில் அவரது ஆதரவாளர்கள் பாரதியார் சாலையில் உள்ள ஏழை மாரியம்மன் சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திருப்பட்டினம் கடைவீதியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் கட்சி கொடியை ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
பின்னர் மாற்றுத்திறனா ளிகளுக்கு பரிசுகள் வழங்கினர். கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!