விவசாயியை கொன்றவர் டிராக்டரில் சிக்கி பலி
காரிமங்கலம்:காரிமங்கலம் அருகே, வழித்தட பிரச்னை தொடர்பாக, விவசாயியை வெட்டிக் கொன்றவர், டிராக்டரில் சிக்கி பலியானார்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த ஜொல்லன்கொட்டாய் முருகன்காடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல், 60; இவரது மைத்துனர் மணி, 65. இருவரும் விவசாயிகள். இருவருக்கும் வழித்தட பிரச்னை இருந்து வந்தது.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த ஜொல்லன்கொட்டாய் முருகன்காடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல், 60; இவரது மைத்துனர் மணி, 65. இருவரும் விவசாயிகள். இருவருக்கும் வழித்தட பிரச்னை இருந்து வந்தது.
நேற்று காலை வீட்டில் இருந்து பேத்தியை பள்ளிக்கு, 'மொபட்'டில் மணி அழைத்துச் சென்ற போது, அங்கு வந்த தங்கவேல் வழித்தட பிரச்னை குறித்து மணியிடம் பேசினார்.
இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், தங்கவேல் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில், மணி இறந்தார்.
அருகேயுள்ள நிலத்தில், மணியின் மகன் சேட்டு, 45, டிராக்டர் ஓட்டிக் கொண்டிருந்தார். அங்கு சென்ற தங்கவேல், சேட்டு காலில் அரிவாளால் வெட்டினார்.
இதில், சேட்டு கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், தங்கவேல் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மீட்கப்பட்ட சேட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
கொலை நடந்த இடத்தில் மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் விசாரணை நடத்தினார். காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!