Advertisement

காஷ்மீரில் 30 பொதுமக்கள் 31 வீரர்கள் கொல்லப்பட்டனர்

புதுடில்லி, ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 2022ல் ௩௦ பொதுமக்கள், ௩௧ பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இது குறித்து, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், லோக் சபாவில் அளித்த பதில்:மத்திய அரசு, பயங்கரவாதத்தை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ளாத கொள்கையை வைத்துள்ளதால், ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு சூழலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இங்கு,2021ல், 41 பொதுமக்கள், 42 பாதுகாப்புப் படை வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்; 192 பேர் காயமடைந்தனர்.

கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை குறைந்து 30 பொதுமக்கள், 31 பாதுகாப்புப் படை வீரர்கள் மட்டுமே கொல்லப்பட்டனர்; 221 பேர் காயமடைந்தனர். இந்த ஆண்டின் முதல் மாதத்தில், பொதுமக்கள் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 23 பேர் காயமடைந்தனர்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து (2)

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    நிரந்தரமாக தீர்வு காணவேண்டும் என்றால் முன்னாள் இராணுவத்தினரை பெரிய அளவில் குடியமர்த்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    பொதுமக்களின் ஒத்துழைப்பும் இங்கு முன்னேறியுள்ளது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement