இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பு: பார்லி.,யில் மத்திய அரசு விளக்கம்
இந்த செய்தியை கேட்க
கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு, 'கிரீமி லேயர்' மற்றும், 'கிரீமி லேயர்' அல்லாதோர் என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்கள் கிரீமி லேயர் என்ற பிரிவுக்குள் வருகின்றனர். ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளோர் கிரீமி லேயர் அல்லாதோர் என்ற பிரிவில் அடங்குவர்.

இந்த வருமான வரையறை, 1993ல் நடைமுறைக்கு வந்தது. இதுவரை நான்கு முறை உயர்த்தப்பட்டுள்ளது.கிரீமி லேயர் அல்லாதோருக்கான ஆண்டு வருமான வரம்பு 8 லட்சம் ரூபாயில் இருந்து 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட உள்ளதாக கூறப்பட்டது. இது குறித்து லோக்சபாவில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதில் அளித்த மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் வீரேந்திர குமார், ''கிரீமி லேயர் அல்லாதோருக்கான ஆண்டு வருமான வரம்பை, 8 லட்சம் ரூபாயில் இருந்து உயர்த்தும் திட்டம் இல்லை,'' என, தெரிவித்தார்.
வாசகர் கருத்து (2)
தமிழ்நாடு முன்னேறியதற்கு காரணமே , இங்கு அனைவரும் பின் தங்கிய வகுப்பினர்களாகி விட்டதால்தான்.முன்னேறிய சமூகமே வெறும் மூன்று விழுக்காடுகள்தான்.இட ஒதுக்கீட்டால் 97 விழுக்காடு மக்களில் தகுதியானவர்கள் முன்னேறுகிறார்கள்.அந்த மூன்று விழுக்காடு மக்கள் தானாகவே தகுதியை பெற்று கொள்கிறார்கள்.மொத்தத்தில் தத்திகள் அரசியல், சினிமா ரசிகர் மன்றம், கூலி வேலை என்று தங்களை பணியில் அமர்த்தி கொள்கிறார்கள்.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
ஆயிரம் ஆண்டானாலும் இட ஒதுக்கீட்டை கட்டிக்கொண்டு அழுதால் ஒரு பொழுதும் முன்னேற முடியாது.