கர்ப்பமாக்கி ஏமாற்றிய நுாலகர் மீது வழக்கு
தேனாம்பேட்டை, சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலையில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர், தேனாம்பேட்டை மகளிர் போலீசில் புகார் ஒன்று அளித்தார்.
புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
திருச்சியைச் சேர்ந்த மணியரசு, 29, என்பவர், பல்கலையில் நுாலகராக பணியாற்றி வருகிறார். அவர், என்னை திருமணம் செய்துக் கொள்வதாக கூறி கர்ப்பமாக்கி, இரண்டு முறை கருவை கலைக்க வைத்தார்.
தற்போது என்னை ஏமாற்றி, வேறு ஒரு பெண்ணை திருமண செய்ய ஏற்பாடு செய்து வருகிறார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேனாம்பேட்டை மகளிர் போலீசார் விசாரித்ததில், பெண்ணை ஏமாற்றியது உறுதியானது. இதையடுத்து, நான்கு பிரிவுகளின் கீழ் மணியரசு மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து (2)
திருமணம் செய்துகொள்வதாகக் கூறினால், திருமணத்துக்கு முந்தைய சடங்கான 'நிச்சயதார்த்தம்' வேண்டுமானால் செய்துகொள்ளலாம்.. உங்களைப்போன்றோர் ஏனமமா Straight ah திருமணத்துக்குப் பிந்தைய சடங்கான 'முதலிரவில்?? - உடலுறவில்' ஈடுபட்டுவிடுகிறீர்கள்.. அப்புறம் அதைவிட அபார்ஷன் வேறு.. தேவையா இதெல்லாம்.. அன்றாடம் இதுபோன்ற செய்திகள் வந்துகொண்டேதான் இருக்கிறது.. செய்திகளில் வெளிவராதது எத்தனை சமபவங்களோ.. செய திகள் பார்பதோ.. படிப்பதோ.. கிடையாது.. இல்லை செய்திகளையெல்லாம் பார்த்தும். 'நமக்கெலலாம் அப்படி நடக்காது' என்று துணிகிறீர்களா..? 😠
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
அதுவும் இரண்டுமுறை கரு கலைப்பு.... வேண்டும்வரை நல்லா கூத்தடித்து பிறகு புகார் கொடுத்தால் போலீஸ் இருவரையும் கைது செய்ய வேண்டும்....