நின்றிருந்த லாரியில் டிரைவர் உயிரிழப்பு
மாதவரம், சென்னை மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கம் 200 அடி சாலை சந்திப்பில் உள்ள, 'மெக்கானிக்' கடை முன் ஒரு லாரி நிறுத்தப்பட்டிருந்தது.
நேற்று காலை, 8:30 மணி அளவில், அங்குள்ளவர்கள், லாரியை எடுக்கும்படி அதில் துாங்கிய டிரைவரை எழுப்பினர்.
ஆனால், டிரைவர் இறந்து கிடந்தார். இது குறித்து, தகவல் அறிந்த மாதவரம் பால்பண்ணை போலீசார் விசாரித்தனர்.
அதில், அந்த லாரி டிரைவர், சேலம், வலசையூர், தமிழ்த்தாய் காலனியை சேர்ந்த மாதேஸ்வரன், 56 என்பதும், நேற்று முன் தினம், திருப்பூரில் இருந்து மணலியில் உள்ள தொழிற்சாலைக்கு பொருட்கள் ஏற்றி வந்ததும் தெரிந்தது.
இரவு, துாக்கத்தில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததுள்ளது, விசாரணையில் தெரியவந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!