பெண் துாக்கிட்டு தற்கொலை
சென்னை, சென்னை கொடுங்கையூர், வெங்கடேஸ்வரா நகர் முதலாவது தெருவைச் சேர்ந்தவர் யாஸ்மின், 27. திருமணமாகாத இவர், தன் தாயுடன் வசித்து வந்தார்.
இவரும், இவரது அம்மாவும், தங்களுக்கு தெரிந்தவர்களிடம், குடும்ப செலவுக்காக 17 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த யாஸ்மின், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து, கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!