நில மோசடி செய்தவர் கைது
சென்னை, கொடுங்கையூர், முத்தமிழ் நகர் 31வது தெருவைச் சேர்ந்தவர் காந்திமதி. இவர், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தா வித்யாஸ்ரமம் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர்.
அந்த அறக்கட்டளைக்காக, முத்தமிழ் நகரில் காலி மனை வாங்குவதற்காக, 2019ம் ஆண்டு, வங்கியில் கடனுதவி பெற முயன்றார்.
அப்போது, அதை அறிந்த அவரது நண்பர் கண்ணன், கொளத்துார், கிழக்கு தெருவைச் சேர்ந்த ரவிக்குமார், 45, என்பவரை, காந்திமதிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
தனியார் நிதி நிறுவனத்தில், இடத்தின் ஆவணத்தை வைத்து, 5 கோடி ரூபாய், கடன் வாங்கி கொடுப்பதாக அவர் உறுதி அளித்திருக்கிறார். அவருடன், ராம்குமார் மற்றும் ஷாஜகான் ஆகியோர் இருந்துள்ளனர்.
அதற்கு முன், ஆவணத்தை பத்திரப்பதிவு செய்யும் கட்டணமாக, 24.95 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனக்கூறி, அவர்கள், அந்த பணத்தை பெற்றுள்ளனர்.
ஆனால், பத்திரப்பதிவு செய்யாமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி உள்ளனர்.
இந்த மோசடி குறித்து, காந்திமதி, 2020ல் ஜூலை மாதம், கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்திலும், மனுதாக்கல் செய்தார்.
விசாரணை நடந்த நிலையில், பணம் மோசடி செய்த, மேற்கண்ட மூவரும் தலைமறைவாகினர்.
இந்த நிலையில், கொடுங்கையூர் போலீசார், ரவிக்குமாரை நேற்று கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!