திருநங்கையருக்கு முன்மாதிரி விருது
சென்னை, முன்மாதிரி விருதுக்கு திருநங்கையர் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார். தமிழக அரசால், ஆண்டுதோறும், மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவையாற்றிய திருநங்கையருக்கு முன்மாதிரி விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில், 2022-23ம் ஆண்டிற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு, அரசு உதவித்தொகை பெறாமல், சுயமாக வாழ்கையில் முன்னேறி இருக்க வேண்டும். நலவாரியத்தில் உறுப்பினராக இருக்கக் கூடாது.
காவல் நிலையத்தில் குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்றிதழ் மற்றும் சேவை தொடர்பான விபரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோர், awards.tn.gov.in என்ற அரசின் இணையதளத்தில் இம்மாதம், 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!