தொழில் உரிமம் புதுப்பிக்க மார்ச் 31ம் தேதி கடைசி
சென்னை, சென்னையில் உள்ள வணிகர்கள், மார்ச் 31க்குள் தொழில் உரிமங்களை புதுப்பித்துக் கொள்ள மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னையில் பல்வேறு வணிகங்களுக்கு, மாநகராட்சி முனிசிபல் சட்டம் - 1919ன் கீழ், பல பிரிவுகளில் வணிகத்தின் வகைப்பாட்டிற்கு ஏற்றவாறு உரிமங்கள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், 2023 - 24ம் நிதியாண்டிற்கு புதுப்பிக்கப்பட வேண்டிய உரிமங்களை, வழக்கமாக மாநகராட்சி உரிம ஆய்வாளர்கள் வாயிலாகவும், மண்டல அலுவலகங்களில் தொழில் உரிமங்களை புதுப்பித்துக் கொள்ளவும், அதற்காக நடத்தப்படும் முகாம்களில் புதுப்பித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வணிகர்களின் நலன் கருதி, https://chennaicorporation.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும், 'க்யூ.ஆர் கோடு' வாயிலாகவும் உரிமங்களை தாமாக புதுப்பித்துக் கொள்ளலாம்.
எனவே, மார்ச் 31க்குள் வணிகர்கள் தங்களது தொழில் உரிமங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!