கொசு ஒழிப்பு பணி நீர்நிலைகளில் தீவிரம்
சென்னை, சென்னை மாநகராட்சியில் உள்ள நீர்நிலைகளில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னையில், கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் 3,312 தற்காலிக மற்றும் நிரந்தர பணியாளர்கள் உள்ளனர். மேலும், பல்வேறு வகையான இயந்திரங்கள் வாயிலாகவும் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
அந்த வகையில், தேனாம்பேட்டை மண்டலம், 114வது வார்டுக்கு உட்பட்ட லாக் நகர் மற்றும், 123வது வார்டுக்கு உட்பட்ட அபிராமபுரம் பகுதியில் உள்ள பகிங்ஹாம் கால்வாயில் 'ட்ரோன்' வாயிலாக கொசு மருந்து தெளிக்கப்பட்டது.
அதேபோல, திரு.வி.க.நகர் மண்டலத்திற்கு உட்பட்ட ஓட்டேரி குப்பை கொட்டும் வளாகம், அண்ணாநகர் மண்டலத்திற்கு உட்பட்ட முல்லை நகர், தென்றல் காலனி, மலர் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டேரி நல்லா கால்வாயில் ட்ரோன் வாயிலாக கொசு மருந்து நேற்று தெளிக்கப்பட்டு, கொசு பெருக்கம் தடுக்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!