முன் விரோதத்தில் தாக்குதல் நடத்திய 4 பேர் காயம்
பூந்தமல்லி, பூந்தமல்லியை சேர்ந்தவர் ராஜா, 43. கனரக வாகனங்கள் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். இங்கு வடமாநிலத் தொழிலாளர்கள் சிலர் வேலை செய்கின்றனர்.
கடை உரிமையாளர் ராஜாவிற்கும், சென்னீர்குப்பத்தை சேர்ந்த ஜெகன் என்பவருக்கும் மது அருந்தும் போது, தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இந்த கடைக்கு வந்த ஜெகனின் ஆட்கள் சிலர், கடையில் இருந்த வடமாநில தொழிலாளர்களிடம் தகராறில் ஈடுப்பட்டனர்.
இதில் ஆத்திரமடைந்த வடமாநிலத் தொழிலாளர்கள், கடையில் இருந்த ஸ்பேனர், இரும்பு ராடு, உருட்டுக் கட்டைகளால் தகராறில் ஈடுபட்டவர்களை தாக்கினர். இதில் நான்கு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து அங்கு வந்த பூந்தமல்லி போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!