ADVERTISEMENT
பழைய மாமல்லபுரம் சாலை, சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி வரை 42 கி.மீ., துாரம் உள்ளது.
மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி சிப்காட் பூங்கா வரை, ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்டு, ராஜிவ்காந்தி சாலை என, பெயர் சூட்டப்பட்டது.
மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி சிப்காட் பூங்கா வரை, ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்டு, ராஜிவ்காந்தி சாலை என, பெயர் சூட்டப்பட்டது.
இதில் விடுபட்ட, சிறுசேரியில் இருந்து பூஞ்சேரி வரை ஆறு வழிச்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி முதற்கட்டமாக, படூரில் இருந்து கேளம்பாக்கம் வரை பணி முடிவடைந்து, மக்கள் பயன்பாட்டிற்கு, சமீபத்தில் திறக்கப்பட்டது.
கேளம்பாக்கத்தில் இருந்து செங்கண்மால் வரை, அடுத்தக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
அதேபோல், காலவாக்கத்தில் இருந்து வெங்கலேரி வரை பணிகள் நடந்து வருகின்றன.
இதில், காலவாக்கம் முதல் திருப்போரூர் வரை பணிகள் முடிவடைந்துவிட்டன.
காலவாகத்தில் ஓ.எம்.ஆர்., இணைப்பு சாலை அமைக்கும் பணி, சில நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது.
- நமது நிருபர் -
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!