டூவீலர் மீது தனியார் பஸ் மோதல் சேலம் கட்டட தொழிலாளி பலி
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே டூவீலர் மீது தனியார் பஸ் மோதியதில், சேலம் கட்டட தொழிலாளி பலியானார்.
சேலம் மாவட்டம் குடுமியான்புரம், சிவதாபுரத்தை சேர்ந்தவர் வெள்ளைய கவுண்டர், 47; கட்டட தொழிலாளி. இவரது உறவினர் சீனிவாசன், 36; இருவரும் ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பைக்கில், ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை கோவிலுக்கு நேற்று சென்றனர். தரிசனம் செய்து விட்டு காலை, 8:30 மணிக்கு, ஊருக்கு புறப்பட்டனர்.
சேலம்-கோவை புறவழிச்சாலையில் பல்லக்காபாளையம் அருகே, முனியப்பன் கோவில் பிரிவு பகுதியில், சேலத்திலிருந்து பவானிக்கு சென்ற தனியார் பஸ், டூவீலர் மீது மோதியது. இதில் வெள்ளைய கவுண்டர் சம்பவ இடத்தில் பலியானார். சீனிவாசன் பலத்த காயமடைந்தார். குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!