நிர்வாக பணி செய்ய விடாமல் இடையூறு 4 பேர் மீது தி.மு.க., ஊராட்சி தலைவி புகார்
சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே, பைத்துார் ஊராட்சி தலைவி கலைச்செல்வி. தி.மு.க.,வை சேர்ந்த இவர், கலெக்டர் கார்மேகத்திடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஊராட்சியின், 2வது வார்டு உறுப்பினரின் கணவர்
சந்திரன். இவர் தனிநபர் பட்டா நிலத்தில், 'பைப்லைன்' கேட்டு மிரட்டுகிறார். எட்டாவது வார்டு உறுப்பினரின் கணவர் கலியமூர்த்தி, அரசு சர்வே எண்ணில் உள்ள நிலத்தை ஆக்கிரமித்துள்ளார்.
அங்கு கூட்டுறவு மூலம் நவீன அரிசி ஆலை வரவுள்ளதால், நிலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என்கிறார். என் மீது அவதுாறு பரப்புகிறார். என் ஊரை சேர்ந்த அத்தியப்பன் மகன் ரவி, ஒப்பந்தப்பணி கிடைக்காததால், பிற ஒப்பந்ததாரர்களை ஊராட்சியில் எந்த பணியும் செய்ய விடுவதில்லை.
மூன்றாவது வார்டு உறுப்பினர் தினகரன், ஊராட்சியில் நடக்கும் பணி முடிந்ததும், அதற்கான ரசீது பொய் எனக்கூறி, 'வாட்ஸ் ஆப்' மூலம் தகவல் பரப்புகிறார். நான் பெண் என்பதால் நிர்வாக பணிபுரிய விடாமல் நான்கு பேரும் இடையூறு செய்கின்றனர். இவர்களால் மன உளைச்சல் ஏற்படுகிறது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!