அடங்கமாட்றாங்கய்யா! பட்டா மாற்றத்துக்கு லஞ்சம் சேலத்தில் சார்பதிவாளர் கைது
சேலம்: பட்டா மாற்றத்துக்கு, 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, தாதகாப்பட்டி சார்-பதிவாளர், புரோக்கர் கைது செய்யப்பட்டனர்.
சேலம், குகையை சேர்ந்தவர் பழனிவேலு, 35; தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில செயலாளர். தாய் பெயரில் உள்ள நிலத்தை, தன் பெயருக்கு மாற்ற, சேலம், உடையாப்பட்டி ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகத்தில் உள்ள, தாதகாப்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

அங்கு புரோக்கர் தொழில் பார்க்கும் கண்ணன், 40, பழனிவேலுவை தொடர்பு கொண்டு, 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், பெயர் மாற்றம் செய்து கொடுப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில், பழனிவேலு புகாரளித்தார். அவர்கள் கொடுத்த ரசாயனம் தடவிய, 50 ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொண்ட பழனிவேலு, நேற்று மதியம், 3:30 மணிக்கு புரோக்கர் கண்ணனிடம் வழங்கினார்.
அதை அவர், அலுவலகத்தில் இருந்த சார்பதிவாளர் செல்வப்பாண்டி, 52, வசம் கொடுத்தார். அடுத்தடுத்து பணம் கைமாறியதை நோட்டமிட்ட, டி.எஸ்.பி., கிருஷ்ணராஜ் உள்ளிட்ட போலீசார், இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். லஞ்ச பணம், 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இருவர் வீடுகளிலும், தனித்தனியே போலீசார் சோதனை நடத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!