மகன், மருமகள் கொடுமை; தீக்குளிக்க முயன்ற மூதாட்டி
ஈரோடு: மகன், மருமகள் கொடுமைப்படுத்துவதாக கூறி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டியை, போலீசார் முன்னதாகவே தடுத்தனர்.
ஈரோடு மாவட்டம் நம்பியூர், பால்குனி, சி.எஸ்.ஐ., காலனியை சேர்ந்த தன்ராஜ் மனைவி ராஜாமணி, 75; ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மனு வழங்க வந்தார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், புகார் பெட்டியில் மனுவை போட்டு செல்ல, போலீசார் அறிவுறுத்தினர்.

ஆனால், அதிகாரியிடம்தான் மனுவை வழங்குவேன் என வற்புறுத்தினார். இந்நிலையில் தான் கொண்டு வந்த மண்ணெண்ணெய் கேனை திறந்து, உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
கேனை பறித்த போலீசார், அலுவலகத்தில் இருந்த டி.ஆர்.ஓ., சந்தோஷினி சந்திராவிடம் மனு கொடுக்க அழைத்து சென்றனர். அவர் வழங்கிய மனுவில் கூறியதாவது:
எனக்கு நான்கு மகன், 1 மகள் உள்ளனர். மூன்றாவது மகன், மருமகளுடன் வசிக்கிறேன். சமீபகமாக மகனும், மகளும் கொடுமைப்படுத்துகின்றனர். வீட்டைவிட்டு வெளியே செல்ல வற்புறுத்தி, சில நேரங்களில் தாக்குகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்ததால், மூதாட்டி கிளம்பி சென்றார்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!