Advertisement

வீடு தேடிச்சென்று பெண் தொழிலாளி கடத்தல்

காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே முன்பணத்துக்காக, பெண் தொழிலாளியை கடத்திய, நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த, பெரியாம்பட்டி, ராமண்ணன் கொட்டாயை சேர்ந்த ராஜேந்திரன். இவரின் மனைவி லட்சுமி, 50; இவர்களின் மகன் முத்து, 35; கூலி தொழிலாளர்களான இவர்கள் ஓராண்டுக்கு முன் கிருஷ்ணகிரியை சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர் கிருஷ்ணனிடம், 2.68 லட்சம் ரூபாய் முன்பணம் பெற்றுக்கொண்டு, அவருக்கு சொந்தமான செங்கல்சூளையில் தங்கி பணியாற்றினர். பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றனர். லட்சுமிக்கு உடல் நலம் பாதிப்பால், வேலைக்கு செல்லவில்லை. நேற்று முன்தினம் லட்சுமி வீட்டுக்கு நான்கு பேருடன் சென்ற கிருஷ்ணன், முன்பணத்தை கேட்டு, லட்சுமியை வாகனத்தில் கடத்தி சென்றார்.

தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில் முத்து அளித்த புகார்படி, எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம், லட்சுமியை மீட்க, காரிமங்கலம் போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசார் நேற்று லட்சுமியை மீட்டு, அவரை கடத்திய கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்தனஹள்ளி பகுதியை சேர்ந்த கோபி, 29, ராஜ்குமார், 27, விஜயகுமார், 34, பிரபு, 24 ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். தலைமறைவான கிருஷ்ணனை தேடி வருகின்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement