நில அளவீடுக்கு லஞ்சம்; தாசில்தார் மீது முறையீடு
சேலம்: நில அளவீடுக்கு தாசில்தார், 2 லட்சம் ரூபாய் கேட்பதாக புகார் தெரிவித்த தம்பதியர், கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றனர்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே கோபாலபுரம், பனந்தோப்பை சேர்ந்தவர் முருகேசன், 55. இவரது மனைவி சாந்தி, 50; சேலம் கலெக்டர் அலுவலகம் முன், டீசலை ஊற்றி நேற்று தீக்குளிக்க முயன்றனர். அவர்களை தடுத்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது முருகேசன் கூறியதாவது: பெத்தநாயக்கன்பாளையத்தில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இது தொடர்பாக ஒருவருடன் பிரச்னை உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நில அளவீடுக்கு உத்தரவு பெற்றேன். கடந்த ஆண்டு நவ.,8ல், நில அளவீடு செய்து கொடுப்பதாக பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் அழைப்பாணை வழங்கினார். ஆனால், காலம் தாழ்த்துகிறார். இதுகுறித்து கேட்டால், 2 லட்சம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து, நிலத்தை அளவீடு செய்து தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!