Advertisement

தங்கம் மருத்துவமனை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

நாமக்கல்: உலக புற்றுநோய் தினத்தையொட்டி, நாமக்கல் தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடந்தது. நாமக்கல் பயணியர் மாளிகையிலிருந்து துவங்கிய பேரணியை, கலெக்டர் ஸ்ரேயா சிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தங்கம் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் குழந்தைவேல், மல்லிகா குழந்தைவேல், தமிழ்நாடு காகித தொழிற்சாலை பொது மேலாளர் கலைச்செல்வன், ரோட்டரி சங்க தலைவர் விஸ்வநாதன், இன்னர் வீல் சங்க தலைவர் நிர்மலா, டிரினிட்டி மகளிர் கல்லுாரி

நிர்வாக இயக்குனர் அருணாசெல்வராஜ், ஐ.எம்.ஏ., கிளை தலைவர் ஜெயக்குமார், வக்கீல் நாகராஜன், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., விஜயராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேரணி நகரின் முக்கிய சாலைகள் வழியாக வந்து மீண்டும் பயணியர் மாளிகையில் முடிவடைந்தது. இதில், டிரினிட்டி மகளிர் கல்லுாரி மாணவியர், இதர கல்லுாரி மாணவியர் கலந்து கொண்டனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement