சிவன்மலையில் ௨வது நாள் தைப்பூச தேரோட்டம்
காங்கேயம்: சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் இரண்டாவது நாள் தேரோட்டம், வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
காங்கேயத்தை அடுத்த சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேரோட்ட விழா நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. சிறிது துாரம் இழுத்துச் செல்லப்பட்டு தெற்கு வீதியில் நிலை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று இரண்டாவது நாள் தேரோட்டம், நேற்று மாலை, ௪:௦௦ மணிக்கு தொடங்கியது. பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்ட தேர், மலையை சுற்றிவந்து கோசமலை பகுதியில் நிறுத்தப்பட்டது. மூன்றாவது நாளான இன்று மாலையில் தேர் நிலை அடைகிறது. விழாவையொட்டி காங்கேயம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதி கிராம மக்கள், குழுவாக சேர்ந்து விரதம் இருந்தனர். இவர்கள் காவடி எடுத்து வந்து, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். இதனால் சிவன்மலை பகுதி முழுவதும், பக்தர்கள் தலையாகவே காணப்பட்டது.

மாடுகளுடன்
வந்த பக்தர்கள்
சிவன்மலை சுப்ரமணிய சுவாமிக்கு, தைப்பூச விரதம் இருக்கும் பக்தர்களில் ஒரு சிலர், தங்களின் காளை மாடுகளை அலங்கரித்து, காவடியுடன் ஊர்வலமாக கோவிலுக்கு நடந்து வருகின்றனர். காளைக்கு பண மாலை அணிவித்தும், அலங்காரம் செய்தும் அழைத்து செல்வதை, மற்ற பக்தர்கள் ஆர்வத்துடன் பார்க்கின்றனர்.
காவடி குழுவினர் மலைக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு, சிவன்மலை பகுதியில் ஆங்காங்கே கூடாரம் அமைத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!