ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
ஈரோடு: இடைத்தேர்தல் ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும் முதன்மை அலுவலர், 3 நிலைகளிலான ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது, ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றுவது தொடர்பான முதற்கட்ட பயிற்சி வழங்கப்பட்டது.
இதில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பேசியதாவது:
தேர்தலுக்காக, 238 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை நீங்கலாக, 48 ஓட்டுச்சாடி கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் வரும், 27ல் தலா ஒரு முதன்மை அலுவலர், 3 நிலைகளில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் என, நான்கு பேர் நியமிக்கப்படுவர். இதன்படி, 286 ஓட்டுச்சாவடிக்கு, 286 முதன்மை அலுவலர், 858 மூன்று நிலைகளிலான ஓட்டுச்சாவடி அலுவலர், 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பணி செய்ய, 62 அலுவலர்கள் என, 1,206 பேர் கணினி மூலம் முதற்கட்ட சுழற்சி முறை பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கையாளுவது, அங்கு நடக்கும் பிற பணிகள் குறித்து பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!