கம்பம் அமைக்க - கொடி கட்ட போலீசார் எதிர்ப்பு: கண்டு கொள்ளாத தி.மு.க.,வினரால் அதிர்ச்சி
ஈரோடு: ஈரோட்டில் கட்சி கொடிக்கம்பம் அமைக்கவும், தோரணம் கட்டவும், போலீசார் எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் நடத்தை விதிகளை காற்றில் பறக்க விட்டு, கம்பம் அமைத்து, தி.மு.க.,வினர் தோரணம் கட்டியது, போலீசாரை திகைக்க வைத்தது.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரசாரத்தில், 12க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் முகாமிட்டு, பிரசார பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரசாரத்தில், 12க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் முகாமிட்டு, பிரசார பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
ஈரோடு, அசோகபுரம், 16 ரோடு ஜங்ஷன் முன்பிருந்த தி.மு.க., கொடி கம்பம் பகுதியை, கட்சியினர் நேற்று காலை துாய்மைப்படுத்தினர். அப்போது வந்த போலீசார், தேர்தல் விதிகளை மேற்கோள் காட்டி கம்பத்தை அகற்ற அறிவுறுத்தினர்.
தி.மு.க.,வினர் அதை கண்டு கொள்ளாமல், தங்கள் பணியை மேற்கொண்டனர். சிறிது நேரத்தில் அப்பகுதியில் தி.மு.க., கொடிகளை தோரணங்களாக கட்ட துவங்கினர். இதையும் போலீசார் கண்டித்தனர். அதையும் கண்டு கொள்ளாமல் தோரணம் கட்டும் பணியை தொடர்ந்தனர். இதை போலீசார் செய்வதறியாது வேடிக்கை பார்த்தனர்.
தங்களிடம் கெடுபிடி காட்டும் போலீசார், கட்சியினர் முன் கைகட்டி நின்றதை பார்த்து, மக்கள் கேலி பேசியபடி நகர்ந்தனர். தேர்தல் நடத்தை விதிகளை கண்டு கொள்ளாத, தி.மு.க.,வினரின் செயல், போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது.
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!