இரண்டு நபர்களிடம் ரூ.2.85 லட்சம் பறிமுதல்
ஈரோடு: ஈரோட்டில், தேர்தல் வாகன சோதனையில், இரண்டு பேரிடம், 2.85 லட்சம் ரூபாயை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு, கள்ளுக்கடைமேடு, கே.கே.நகரை சேர்ந்தவர் ஜீவகுமார். எலக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கடையில் இருந்து வீட்டுக்கு காரில் சென்றபோது, ஒரு லட்சத்து, 45 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை எடுத்து சென்றார்.

கள்ளுக்கடைமேடு அருகே, நிலை கண்காணிப்பு குழு அதிகாரி ருத்ரமூர்த்தி தலைமையிலானவர்கள், காரை சோதனையிட்டனர். உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர்.
* ஈரோடு, மீனாட்சிசுந்தரனார் சாலை பகுதியில், பறக்கும் படை குழு அதிகாரி மெய்யப்பன் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மொபட்டில் அப்புக்குட்டி என்பவர், ஒரு லட்சத்து, 40 ரூபாய் ரொக்கத்தை எடுத்து வந்தார். உரிய ஆவணங்கள் இல்லாததால், தொகையை பறிமுதல் செய்தனர்.
அதே பகுதியில் ஒரு மெடிக்கல் ஏஜென்சியில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை செய்வது தெரிந்தது.
தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் உத்தரவுப்படி, மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!