ADVERTISEMENT
கோவை:டில்லியில் நடந்த கேலோ இந்தியா சைக்கிளிங் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக அணியில் கோவையை சேர்ந்த வீராங்கனை சிறப்பாக செயல்பட்டு அசத்தினார்.
மத்தியப்பிரதேசம், போபாலில் ஐந்தாவது 'கேலோ இந்தியா யூத் கேம்ஸ்' விளையாட்டு போட்டிகள் கடந்த ஜன., 30ம் தேதி துவங்கி பிப்., 11 வரை நடக்கிறது. இதில், 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, டிராக் சைக்கிளிங் போட்டி பிப். 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடந்தது.

இதன், 18 வயதுக்குட்பட்டோருக்கான 'டீம் ஸ்பிரிட்' பிரிவு போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்ற ஸ்ரீமதி, கஸ்துாரி மற்றும் தமிழரசி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
தமிழக அணி சார்பில் போட்டியிட்ட மாணவியர்களில் ஸ்ரீமதி மற்றும் கஸ்துாரி ஆகியோர் துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். தமிழரசி, கோவை மாவட்டம் அன்னுார் செயின்ட் மேரிஸ் பள்ளியில் +2 படித்து வருகிறார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!