புதிய கணக்குகள் துவங்குவதில் கோவை அஞ்சல் கோட்டம் குட்
கோவை:'கோவை அஞ்சல் கோட்டத்திற்கு கொடுக்கப்பட்ட இலக்கை விட அதிகப்படியான புதிய கணக்குகள் துவங்கப்பட்டுள்ளது,' என்று தபால் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய முழுவதும் உள்ள தபால்நிலையங்களில், 'ஒரு நாள் ஒரு கோடி' எனும், புதிய திட்டத்தின் வாயிலாக புதிய கணக்குகள் துவக்க சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் சேமிப்பு கணக்கு, மாத வருமான திட்டம், செல்வமகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு புதிய கணக்குகள் துவங்கப்பட்டது.

அந்த வகையில் கோவை அஞ்சல் கோட்டத்திற்கு 8,900 புதிய கணக்குகள் துவங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து, ஜன., 28, 29, 30, 31 ஆகிய நான்கு நாட்கள் புதிய கணக்குகள் துவங்கும் பணி கோவையில் அனைத்து தபால்நிலையங்களிலும் நடந்தது. இதில், கொடுக்கப்பட்ட இலக்கிற்கு அதிகமாக புதிய கணக்குகள் துவக்கப்பட்டதாக, தபால்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கோவை கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கோபாலன் கூறுகையில்,
''கோவை அஞ்சல் கோட்டத்தில், 176 தபால் நிலையங்கள் உள்ளது. 'ஒரு நாள் ஒரு கோடி' முகாம் வாயிலாக கோவை அஞ்சல் கோட்டத்திற்கு மட்டும், 8,900 புதிய கணக்குகள் துவங்க வேண்டுமென, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்கு நாட்கள் நடந்த முகாமில், 10,119 புதிய கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன,'' என்றார்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!