ADVERTISEMENT
கோவை:அஜ்ஜனூர் பாரதிய வித்யா பவன் பப்ளிக் பள்ளியின் முதலாம் ஆண்டு விளையாட்டு தின விழா பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
பள்ளி முதல்வர் ஜெயலலிதா அனைவரையும் வரவேற்றார். கற்பகம் உயர்கல்வி அகாடமியின் உடற்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை இயக்குனர் சுதாகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
பள்ளி முதல்வர் ஜெயலலிதா அனைவரையும் வரவேற்றார். கற்பகம் உயர்கல்வி அகாடமியின் உடற்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை இயக்குனர் சுதாகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
விளையாட்டு விழாவை முன்னிட்டு மாணவர்கள் கம்பர், கபிலர், பாரதியார், வள்ளுவர் என நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து, மாணவர்கள் பள்ளியில் தாங்கள் கற்றுக்கொண்ட கராத்தே முறைகளை காட்சிப்படுத்தினர். நெருப்பு பற்றவைக்கப்பட்ட ஓடுகளை உடைத்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினர். யோகா, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
பின்னர், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினர் சுதாகர், இணைசெயலாளர் ஸ்ரீ சூர்ய நாராயண், பதிவாளர் ஸ்ரீ பிரபாகர் ராவ், ஆர்.எஸ்.புரம் பாரதிய வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் சங்கர், அஜ்ஜனூர் பாரதிய வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் மகேஸ்வரி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!