வெள்ளகோவில் அருகே கோர விபத்து அரசு பஸ்-வேன் மோதலில் 3 பேர் பலி
காங்கேயம்: வெள்ளகோவில் அருகே, அரசு பஸ்-ஆம்னி வேன் மோதிக் கொண்டதில், இரு பெண்கள் உள்பட மூன்று பேர் பலியாகினர். மூன்று பேர் பலத்த காயமடைந்தனர்.
திருப்பூர், பாண்டியன் நகரை சேர்ந்தவர் மருதாச்சலம், 50; இவரின் மனைவி பிரமிளா, 45; அதே பகுதியை சேர்ந்தவர் தேவி, 55; இவரின் மகன் லோகேஸ்வரன், 26, மற்றும் அனுரூபா, 17, தர்சினிபிரியா, 17, ஆகியோர், மாருதி ஆம்னி வேனில் வெள்ளகோவில் அருகே உறவினர் வீட்டு விசேஷத்துக்கு நேற்று காலை சென்றனர். நிகழ்ச்சி முடிந்து திருப்பூருக்கு கிளம்பினர். அதேசமயம் கோவையில் இருந்து கும்பகோணத்துக்கு, 30 பயணிகளுடன் அரசு பஸ் சென்றது. வெள்ளகோவில் அருகே வெள்ளமடை பகுதியில் காலை, 11:30 மணியளவில் எதிர்பாரவிதமாக அரசு பஸ்சும், ஆம்னி வேனும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேராக மோதிக்கொண்டன. இதில் ஆம்னி வேன் உருக்குலைந்து, அதில் பயணித்தவர்கள் துாக்கி வீசப்பட்டனர்.

சம்பவ இடத்தில் பிரமிளா, லோகேஸ்வரன் உடல் சிதறி பலியாகினர். படுகாயத்துடன் மற்ற நால்வரும் திருப்பூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கோவை மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் தேவி இறந்தார். வெள்ளகோவில் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கோர விபத்தால், 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!