பிரசாரத்துக்கு கூலி தொழிலாளர்கள் ஆர்வம்: ஆட்கள் பற்றாக்குறையால் நிறுவனங்கள் திண்டாட்டம்
ஈரோடு மாநகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நுாற்றுக்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஜவுளிகளை செக்கிங் செய்யவும், மென்டிங் செய்யவும், துணி வகைளை மடிக்கவும், பேக்கிங் செய்யவும் தினக்கூலி அடிப்படையில், ஆண், பெண் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தற்போது கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
ஓட்டு கேட்க செல்லும்போது, அதிகளவில் கூட்டம் சேர்க்க, ஆள் பிடிக்கும் வேலைகளில் தி.மு.க., - அ.தி.மு.க., கட்சி நிர்வாகிகள் களத்தில் இறங்கியுள்ளனர்.
பிரசாரத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, ஒரு குவார்ட்டர், மூன்று வேளை உணவு, நாள் ஒன்றுக்கு, 500 ரூபாய் வரை வரை வழங்குவதாக கூறுகின்றனர். இதனால் பெரும்பாலான தொழிலாளர்கள் பிரசாரத்துக்கு சென்று விட்டதால், பனியன் நிறுவனங்களில் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
அசோகபுரம், வைரபாளையம், கருங்கல்பாளையம் பகுதிகளில் செயல்படும், கயிறு உற்பத்தி நிறுவனங்களிலும் இதே நிலை தான் உள்ளது.
இதனால் பனியன் நிறுவனங்கள், தங்கள் நிறுவனம் முன், பணிக்கு ஆட்கள் தேவை என்று அறிவிப்பு வைத்துள்ளனர்.
இதுகுறித்து பனியன் நிறுவன உரிமையாளர் அங்கு கூறியதாவது: இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு தொழிலாளர்கள் சென்று விட்டனர். இதனால் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரசாரம், 25ம் தேதி வரை நடக்கும். இதனால், 26ம் தேதிக்கு மேல் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வாய்ப்புண்டு. இவ்வாறு அவர் கூறினார்.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!