முருகன் கோவில்களில் பூஜை: மனமுருகி பக்தர்கள் தரிசனம்
முருகி தரிசனம் செய்தனர்.
தைப்பூச விழாவையொட்டி, சேலம், குமரகிரி தண்டாயுதபணி கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. குமரப்பெருமானுக்கு பால், பன்னீர், இளநீர் என, பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் செய்யப்பட்டன. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். காவடி, முடி செலுத்தும் வைபவம் நடந்தது.
அம்மாபேட்டை குமரகுரு சுப்ரமணியர் கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்து தங்க கவச சாத்துப்படி செய்யப்பட்டது. மாடவீதி வழியே சுவாமி உலா, கோவிலில் தங்கத்தேர் புறப்பாடு நடந்தது. அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
ஜாகீர்அம்மாபாளையம் காவடி பழநியாண்டவர் ஆசிரமத்தில் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. குழந்தை, திருமண வரம் வேண்டியும், குடும்பத்தில் உள்ளவர்கள் நோய் நொடியின்றி இருக்கவும், பல்வேறு வேண்டுதல் வைத்து, திரளான பக்தர்கள், காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பேர்லண்ட்ஸ் முருகன் கோவிலில் சுவாமிக்கு தங்க கவசம் சாத்துப்படி; ஏற்காடு அடிவாரம் ஆறுபடை முருகன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்; ஊத்துமலை முருகன், கந்தாஸ்ரமம் உள்ளிட்ட முருகன் கோவில்களில் வள்ளி, தெய்வானையுடன் முருகனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
காவடியாட்டம்
தாரமங்கலம் சக்தி
மாரியம்மன் கோவிலிலுள்ள முருகனுக்கு வாசனை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறுவர்கள், 36 காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியே, 'அரோகரா' கோஷம் எழுப்பி ஆடியபடி ஊர்வலமாக சென்றனர். இதில் முருகன், வள்ளி, தெய்வானையை தேரில் எழுந்தருளச்செய்து, பக்தர்கள் இழுத்து சென்றனர். அதேபோல் தாரமங்கலம் கண்ணனுார் மாரியம்மன் கோவில் அருகே உள்ள முத்து குமாரசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
ஓமலுார் கடைவீதி சுப்ரமணியர் கோவிலில், சிறப்பு பூஜை நடந்த. தொடர்ந்து மயில் வாகனத்தில் எழுந்தருளிய சுப்ரமணியர், ஓமலுார் - தர்மபுரி சாலையில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காசிவிஸ்வநாதர், அக்ரஹாரத்தில் உள்ள வைத்தீஸ்வரன், கருப்பூர் கந்தசாமி கோவிலில் முருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!