கர்ப்பிணியை தாக்கியதில் குழந்தை பலி: அண்ணி கைது
வண்ணாரப்பேட்டை:சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் கவுசல்யா, 30. இவரது அண்ணன் விஜயசிம்மன் என்பவருக்கும், அவரது மனைவி துர்காபாய், 35, என்பவருக்கும் ஐந்து ஆண்டுகளாக விவாகரத்து வழக்கு நடக்கிறது.
இந்நிலையில் துர்காபாய், தன் தோழியர் இருவருடன் விஜயசிம்மனின் சகோதரி கவுசல்யா வீட்டிற்கு, கடந்த மாதம் 17ம் தேதி சென்று வாக்குவாதம் செய்துள்ளார்.
இந்நிலையில் துர்காபாய், தன் தோழியர் இருவருடன் விஜயசிம்மனின் சகோதரி கவுசல்யா வீட்டிற்கு, கடந்த மாதம் 17ம் தேதி சென்று வாக்குவாதம் செய்துள்ளார்.
அப்போது, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கவுசல்யாவை கீழே தள்ளி தாக்கியுள்ளனர். இதில் வலியால் துடித்த கவுசல்யாவை அங்கிருந்தோர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.
கடந்த மாதம், 23ம் தேதி, கவுசல்யாவுக்கு குறைபிரசவத்தில் பெண் குழந்தை பிறந்து, சில நிமிடங்களிலேயே இறந்துள்ளது.
சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய கவுசல்யா, தன் குழந்தை இறந்ததற்கு, அண்ணி மற்றும் அவரது தோழியர் தாக்கியது தான் காரணம் என, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.
இதன்படி போலீசார், துர்காபாயை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். துர்காபாயின் தோழியரான பப்லு, குஷிதா பானுவை போலீசார் தேடிவருகின்றனர்.
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!