Advertisement

கோர்ட் உத்தரவுகளுக்கு மதிப்பளிப்பாரா கமிஷனர்?: சிந்தனைக்களம்

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

டி.ஆர். ரமேஷ்




ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர்




தி.மு.க., அரசு மீண்டும் 2021 மே மாதம் ஆட்சி அமைத்த பின் ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக குமரகுருபரன் நியமனம் செய்யப்பட்டார்.

இவர் பதவி ஏற்ற உடன் துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பினார். அதில், அறநிலையத்துறையில் வெளிப்படைத் தன்மை முழுமையாக இருக்கும் என கூறப்பட்டது.

தவறுகள் ஏற்பட்டால் கோவில் நிர்வாகிகள் மீது அறநிலையத்துறை சட்டப் பிரிவு, 53லும், செயல் அலுவலர்கள் மீது தமிழக அரசு விதிகள் படியும் நடிவடிக்கை தவறாமல் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பார்த்த கோவில் ஊழியர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி. அறநிலையத்துறையில் சீர்திருத்தம் வரும். கோவில் பணம், கோவில் நோக்கத்திற்காகவும், அறச்செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று எண்ணினர்.

ஆனால், நடந்தது வேறு. கமிஷனர் கோவில் பணத்தையும், பொது நல நிதியில் சேர்த்து வைக்கப்பட்ட மிகப் பெரிய தொகையையும் அரசு பணம் போல நினைத்து செயல்பட துவங்கினார்.

அரசு பணத்தை எடுப்பதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அதே போல கோவில் பணத்தையும், பொது நல நிதியையும் எடுக்க சில சிறப்பான, வெளிப்படைத் தன்மையை நிறுவும் வழிமுறைகள் உள்ளன.

அவற்றை கமிஷனர் கண்டு கொள்ளவே இல்லை. உயர், உச்ச நீதிமன்றகளின் பல தீர்ப்புகளை துச்சமாக மதித்து அவற்றிற்கு விரோதமாக செயல்பட்டார்.

அறநிலையத்துறை சட்டத்தில், அமைச்சருக்கு எந்த அதிகாரமும் வழங்கப்பட வில்லை.

சட்டப்பூர்வமாக செயல்பட வேண்டிய அதிகாரி, அமைச்சர் சொல்வதற்காக தன் அதிகாரத்தை பயன்படுத்தினால் செல்லாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, அமைச்சர் கோவில் சொத்துக்கள், நிதி சம்பந்தமாக சட்டசபை, வெளியிலும் எந்த அறிவிப்பும் செய்ய முடியாது. ஆனால், கமிஷனர் சட்டசபை அறிவிப்புகளை நிறைவேற்ற குழு அமைத்து கோவில் நிதியில் இருந்தும், ஹிந்து சமய பொது நல நிதியில் இருந்தும், 2,000 கோடி ருபாய் செலவு செய்ய உத்தரவுகள் வழங்கியுள்ளார்.

கோவிந்த மேனன் ஐ.ஏ.எஸ்., வழக்கில், திட்டங்களுக்கு சட்டத்தை பின்பற்றி ஒப்புதல் அளிக்க வேண்டிய அதிகாரி, தானே திட்டங்களை தொடங்க முடியாது என்று உச்சநீதிமன்றம், 1964ல் திட்டவட்டமாக கூறியுள்ளது.

ஆனால், அறங்காவலர்கள் செய்யும் விண்ணப்பங்களை சட்டபூர்வமான ஒப்புதல் மட்டுமே அளிக்கும் அதிகாரம் உள்ள கமிஷனர், கோவில் தங்கத்தை உருக்குவது, கல்லுாரிகள் துவங்குவது, 'பொது நல நிதியிலிருந்து செலவு செய்து கொள்ளுங்கள்' என்று கூறுவது, கோவில் பணத்தில் கார்கள் வாங்குவது என உத்தரவு போடுவது மிகப் பெரிய சட்ட மீறல்; நீதிமன்ற அவமதிப்பு.

இதனை கமிஷனர், 2021 மே மாதம் முதல் சர்வ சாதாரணமாக செய்து வந்திருக்கிறார். கோவில் பணத்தில் இருந்து, 10 ரூபாய் கூட செயல் அலுவலர், அறங்காவலர் அனுமதி இல்லாமல் செலவு செய்ய முடியாது.

ஆனால், கோவில் பணத்தில் இருந்து நுாற்றுக்கணக்கான கணினி, 'பிரின்டர்' போன்றவை வாங்க கமிஷனர் உத்தரவு போட்டுள்ளார். அனுமதி அளிக்க வேண்டிய அதிகாரியே முடிவெடுத்து, செலவு செய்ய கூறி உத்தரவு போட சட்டம் என்றுமே அனுமதித்ததில்லை.

கடந்த, 2021ல் நீதிபதிகள் மஹாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு ஹிந்து அறநிலையங்கள் விஷயத்தின் மிக விரிவான ஒரு தீர்ப்பை வழங்கி அதில், 75 உத்தரவுகள் கோவில்கள் விஷயத்தில் போட்டிருந்தனர்.

அவற்றுள் முக்கியமானது, 24வது உத்தரவு. அதில், கோவிலை பராமரிக்கவும், பூஜை உற்சவங்கள், பூசாரி, ஓதுவார் முதலியோர் சம்பளம் ஆகியவற்றுக்குத் தான் கோவில் நிதி செலவு செய்யப்பட வேண்டும்.

உபரி நிதி பிற கோவில்களின் புனரமைப்பிற்கும், ஹிந்து சமய பிரச்சாரத்திற்கும் மட்டுமே செலவு செய்யப்பட வேண்டும்.

இந்த உத்தரவு வந்த பின் தான் அரசும், அறநிலையத்துறையும் நூற்றுக்கணக்கான சட்ட விரோத, நீதிமன்ற தீர்ப்பு விரோத அறிவிப்புகளை சட்டசபையிலும், துறை ரீதியாகவும் செய்து கோவில் பணத்தில் நூற்றுக்கணக்கான கோடிகளை செலவு செய்து வருகிறது.

இந்தச் செயல்கள் எல்லாம் கமிஷனர், நீதிமன்றத்தை நோக்கி சவால் விடுவன போல் உள்ளது.

மேலும், 31வது உத்தரவில் கோவில் நிலங்கள் குறித்து, இந்த அமர்வு மிக விரிவான உத்தரவுகள் போட்டுள்ளது. இருப்பினும் கமிஷனர் அவற்றை பின்பற்ற ஆர்வம் காட்டவில்லை.

இன்றும் பல கோவில்களில் மிக குறைவான வாடகை, குத்தகை தொகைகளே வசூலிக்கப் படுகின்றன. கோவில் நிலங்களை ஆக்கிரமித்து, கோவில் பணத்தில் அறநிலையத்துறை மண்டல அலுவலகங்கள் பல இடங்களில் கட்டியுள்ளனர்.

இவற்றில் ஒரு இடத்திற்கு கூட வாடகை தருவதில்லை. கோவில் நிலங்களின் மிகப் பெரிய ஆக்கிரமிப்பாளர் அறநிலையத்துறை.

திருமடங்களுக்குச் சொந்தமான, 50 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டடத்தை சென்னை ஆழ்வார்பேட்டையில் கோவில் தணிக்கைத் துறை ஆக்கிரமித்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை, கமிஷனர் இந்த விஷயத்தில் மதிக்கவே இல்லை.

அடுத்ததாக, 33வது உத்தரவில் கோவில் நிலங்களை பொது நோக்கத்திற்காக கூட விற்கக் கூடாது என்று நீதிமன்றம் கூறினால், அறநிலையத்துறை தரப்பில் நாங்கள் அரசு தேவைக்கு மாத்திரம் எடுத்துக் கொள்வோம் என்று பதில் அளிக்கின்றனர்.

சட்டமோசடி



ஒரு கோவிலில், செயல் அலுவலரே தக்காராக இருப்பது சட்ட மோசடி என்று மதுரை உயர் நீதி மன்றத்தில், நான் தொடுத்த பழனி கோவில் வழக்கில், தனி நீதிபதி 2020 செப்டம்பரில் தீர்ப்பு அளித்தார்.

இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கமிஷனரும், அரசும் மேல் முறையீடு செய்தனர். ஆனால், நீதிமன்றம் ஏற்கவில்லை.

இருப்பினும் அதே பழனி கோவிலில் மீண்டும் செயல் அலுவலரை தக்காராக, 2021ல் மீண்டும் நியமனம் செய்தனர்.

சமயபுரம், திருவண்ணாமலை, சென்னை பார்த்தசாரதி கோயில்களிலும் இந்த சட்ட மோசடியும், நீதி மன்ற அவமதிப்பும் தொடர்கிறது.

ஒரு அரசு பணியாளரை கோவில் அல்லது மடத்தின் அறங்காவலராக நியமனம் செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.

சமீபத்தில் தொண்டை மண்டல ஆதீனகர்த்தர் பதவி விலகியபோது அறநிலையத்துறை ஊழியர் ஒருவர் தான் சட்ட விரோதமாக பொறுப்பு எடுத்துக்கொண்டார்.

கடந்த, 60 ஆண்டுகளாக காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் அறநிலையத்துறை ஊழியர்தான் நிர்வாக அறங்காவலராக உள்ளார்.

இடைக்கால உத்தரவுகள்



கடந்த, 2019ல் தொடுத்த பொது நல வழக்கில், கோவில் நிலங்களை பொது நோக்கத்திற்கு தேவை என்று சொல்லி எடுக்கக் கூடாது என்று இடைக்கால உத்தரவை உயர்நீதி மன்றம் பிறப்பித்தது.

அதையும் மீறி கமிஷனர், கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் கோவில் நிலத்தை சட்ட விரோதமாக எடுக்க முற்பட்டார். பெரும் எதிர்ப்பு வந்த பின், அதை நீண்ட கால குத்தகை என்று மாற்றம் செய்து அரசாணை பிறப்பித்தார். அதுவுமே சட்ட விரோத ஆணை தான்.

பொது நல நிதி



கோவில் பணத்தில் கல்லுாரிகள் துவங்குவது குறித்து உயர் நீதி மன்ற அமர்வு அளித்த இடைக்கால தடை உத்தரவில், கடந்த 10 ஆண்டுகளில் பொது நல நிதிக்கு சட்ட விரோதமாக பணம் பெறப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் கமிஷனர், மிகப் பெரிய அளவில் ஹிந்து சமய பொது நல நிதியில் இருந்து சட்ட விரோதமாக செலவு செய்து வந்துள்ளார்.

கடந்த 2022 மே மாதத்தில் தொடுத்த வழக்கில் செயல் அலுவலர் நியமனம் செய்யாமலேயே மருதமலை, தென்காசி, சுவாமிமலை, வடபழநி, மலைக்கோட்டை, திருவேற்காடு, திருவானைக்காவல் உள்ளிட்ட, 47 கோவில்களில் அறநிலையத்துறை மோசடியாக நிர்வாகம் செய்து வருகிறது.

இந்தக் கோவில்களில் இருந்து துறை நிர்வாகத்தை நீக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். நீதிமன்ற அமர்வு, மனுதாரர் கோரிக்கையை இந்த நீதி மன்றம் ஏன் ஏற்கக் கூடாது என்று அரசு தரப்பில் பதில் அளிக்கவும், கோவில் ஆவணங்கள் - செயல் அலுவலர் நியமன உத்தரவுகள் எல்லாவற்றையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

ஆனால், இது நாள் வரை ஒரு கோவில் செயல் அலுவலர் உத்தரவு கூட ஆணையரால் காட்ட முடியவில்லை.

தொடர்ந்து சட்ட விரோதமாகவும், நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமலும் செயல்பட்டு வருகிறது அறநிலையத்துறை. இந்த சட்ட விரோத போக்கை முன்னின்று செய்பவர், அறநிலையத்துறை கமிஷனர் என்று ஆகி விட்டது.

தற்போது அறநிலையத்துறைக்கு புதிய கமிஷனராக முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய கமிஷனர் அறநிலையத்துறை சட்டத்தையும், அரசியல் நிர்ணய சட்டத்தையும் முழுமையாக பின்பற்றி செயல்பட வேண்டும் என்பதே பக்தர்கள் எதிர்பார்ப்பு.

அதற்கு எளிய வழி சென்னை உயர் நீதிமன்றம், கோவில்கள், ஹிந்து சமய அறக்கட்டளைகள், திருமடங்கள், அவற்றின் சொத்துக்கள் குறித்து பிறப்பித்த உத்தரவை முழுமையாகவும், உடனுக்குடனும் பின்பற்றுவதே.



வாசகர் கருத்து (10)

  • Natarajan Dhanasekar - Bhopal,இந்தியா

    sdf

  • P Karthikeyan - Chennai,இந்தியா

    இவுங்க தினமும் சாப்பிடற பஜ்ஜி போண்டா இதெல்லாம் கூட உண்டியல் காசுதான்.. இந்துக்கள் நவ துவாரங்களை மூடிக்கொண்டு இருக்கும் வரை இப்படித்தான்..

  • ராஜா -

    ஒவ்வொரு கோவில்களிலும் உண்டியல் கொள்ளை காவல்துறை மற்றும் அறமற்ற துறைகளின் ஆசிர்வாதத்தொடு ஜரூராக நடந்து கொண்டு உள்ளது. உண்டியலின் மேல் ஒரு பணையை கவிழ்த்தி கவுண்ட மணி பாணியில் நூதனக்கொள்ளை நடக்கிறது. அதை கண்டிக்க வேண்டிய இத்துறைகள் திருடன் கால் பாதுகைகளுக்கு காவல் புரிகிறது. இது போன்ற அவலங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருவது வெட்கக்கேடு.

  • Dharmavaan - Chennai,இந்தியா

    ஹிந்து இயக்கங்கள் ஏன் இவன் மீது நீதி அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது

  • Dharmavaan - Chennai,இந்தியா

    hindu

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement