இந்த நிலையில், கடந்த 2ம் தேதி மாலை, தாம்பரம், பெருங்களத்துாரை அடுத்த ஓட்டேரியைச் சேர்ந்த பழைய குற்றவாளி கார்த்திக், 35, என்பவரை, சென்னை 'மியாட்' மருத்துவமனையில் அனுமதித்தார்.
உறவினரின் இறுதி ஊர்வலத்தில், பட்டாசு வெடித்தபோது, இரு கைகளும் துண்டிக்கப்பட்டதாக, மருத்துவமனையில் கூறினார்.
இந்த நிலையில், 3ம் தேதி இரவு, மர்மபொருள் வெடித்து, ஒருவர் பலத்த காயமடைந்ததாக, அம்பத்துார் இன்ஸ்பெக்டர் ராமசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது தலைமையில் போலீசார், கார்த்திக்கை மருத்துவமனையில் சேர்த்த விஜயகுமாரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
அதில், 2017ம் ஆண்டு புழல் சிறையில் இருந்த போது ஆறு கொலை வழக்கு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் சிக்கிய, பழைய குற்றவாளியான கார்த்திக்குடன் நட்பு ஏற்பட்டது.
இதனால், கார்த்திக் அவ்வப்போது, விஜயகுமார் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். மேலும், நாய் வளர்ப்பு மற்றும் விற்பனையில், விஜயகுமாருக்கு ஏற்படும் பிரச்னைகளில், கார்த்திக் துணையாக இருந்துள்ளார்.
பல்வேறு வழக்குகளில் கார்த்திக்கிற்கு எதிரிகள் அதிகம் இருந்ததாகவும், இதனால், அவர் தன் பாதுகாப்பிற்காக, கைவசம் நாட்டு வெடிகுண்டு வைத்திருப்பது வழக்கம் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2ம் தேதி மாலை, 'கூழாங்கல், பால்ரஸ்' ஆகியவற்றின் மூலம் சக்தி வாய்ந்த நாட்டு வெடிகுண்டு தயாரித்திருக்கிறார்.
அதை தயாரிக்கும்போது எதிர்பாராமல் வெடித்ததால், கார்த்திக்கின் இரு கைகளும் துண்டிக்கப்பட்டது, விசாரணையில் தெரியவந்தது. இது தவிர, வடசென்னையை சேர்ந்த சூர்யா என்பவரை, வெடிகுண்டு வீசி கொலை செய்யவும் திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.
போலீசார், விஜயகுமாரின் வீட்டில் சோதனையிட்டு, நாட்டு வெடிகுண்டு தயாரிப்புக்கான, மூலப்பொருட்களை கைப்பற்றினர். இந்த பிரச்னையால், அந்த பகுதியை சேர்ந்தவர் அச்சத்தில் உள்ளனர்.
வீட்டில், நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில், பழைய குற்றவாளிக்கு, இரு கைகள் துண்டிக்கப்பட்டு, 24 மணி நேரத்திற்கு பிறகும், அம்பத்துார் காவல் நிலைய உளவுப்பிரிவு போலீசார், பிரச்னையின் தன்மை அறியாமல், 'கோட்டை' விட்டுள்ளனர்.அவர்களிடம், கஞ்சா விற்பனை, ரவுடிகள் நடமாட்டம் போன்ற, சட்டவிரோத சம்பவங்கள் குறித்து, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தகவல் தெரிவித்தாலும், அதை கண்டு கொள்வதில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து, ஆவடி மாநகர காவல் ஆணையரக அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. ஆனா.. ஆளுனர் இவிங்க எழுத்தித்தரா மாதிரி, அமைதிப் பூங்காவா திகழுது னு நொட்டணுமாம்.. 😠