ADVERTISEMENT
சென்னை:ஹரியானா மாநிலம், சோனிபட் நகரிலுள்ள தன பந்து கொட்டாரம் பல்கலை சார்பில், அகில இந்திய பல்கலை இடையிலான கூடைப்பந்து சாம்பியன் ஷிப் போட்டி, பல்கலையில் நடந்தது.
இரு பாலருக்கும் நடந்த இப்போட்டியில், நாட்டின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் 80க்கும் மேற்பட்ட பல்கலை அணிகள் பங்கேற்றன.
இரு பாலருக்கும் நடந்த இப்போட்டியில், நாட்டின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் 80க்கும் மேற்பட்ட பல்கலை அணிகள் பங்கேற்றன.
இதன் பெண்கள் பிரிவில், 'லீக்' சுற்று மற்றும் காலிறுதி, அரையிறுதி ஆட்டங்களில் ஆதிக்கம் செலுத்திய தமிழகத்தின் எஸ்.ஆர்.எம்., மற்றும் சென்னை பல்கலை அணிகள், எதிர்பார்த்தது போலவே இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதி, சாம்பியன் பட்டத்தை வெல்ல, கடும் பலப்பரிட்சை நடத்தின.
கோப்பையை வென்று, வெற்றி வாகை சூடப்போவது யார் என்பதை தீர்மானிக்க நடந்த இறுதி போட்டியில், இரு அணி வீராங்கனையரும் தங்கள் முழுத் திறனோடு, ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
யார் கோப்பையை வெல்வர் என, கடைசி நொடி வரை பரபரப்பு, பதற்றம் நிலவியது.
கடைசி நிமிடத்தில் சமயோஜிதமாக செயல்பட்ட சென்னை பல்கலை வீராங்கனையர், ஆட்ட நேர முடிவில் 70:69 என, ஒரு புள்ளி வித்தியாசத்தில், எஸ்.ஆர்.எம்., பல்கலையை சமயோஜிதமாக வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!